பங்குனி உத்திரத் திருவிழா நாளில், வெறிச்சோடி காணப்படும் இராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில்!

Publish by: மகேந்திரன் --- Photo :


மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமை இருப்பதாக நம்பிக்கை.உண்டு 12-வது மாதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் திருநாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.

 

இந்த நாளில், திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானையை மணம் முடித்ததாகவும், இந்த நாளில்தான் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நாளில், நாடெங்கிலும் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களுக்கும் பக்தர்கள் பால், வேல், மயில், பறவைக் காவடி எனப் பல்வகையான காவடிகளை எடுத்துச்சென்று, தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதையொட்டி, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில், ராமேஸ்வரம் மேலவாசல் முருகன் கோயில், குயவன்குடி சுப்பையா ஆலயம், பிரப்பன்வலசை முருகன் கோயில் ரெணபரலி முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் உத்திரத் திருவிழா நடைபெறும்.

 

ஆனால் இந்தாண்டு கொரானா வைரஸை கட்டுப்படுத்திட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதனால் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலுக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், வேல் காவடி, மயில் காவடி, பறவைக் காவடி எனப் பல்வேறு வகையான காவடிகள் எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்துவது முற்றிலும் தடைபட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன.


Leave a Reply