ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் – சந்திரசேகரராவ்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு உத்தரவு வரும் 14-ம் தேதியுடன் முடியும் நிலையில் மேலும் நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கேட்டுக்கொண்டுள்ளார். போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாத இந்த நாட்டில் கொரொனாவை கட்டுப்படுத்துவது கடினம் என்றும், எனவே ஊரடங்கு நீட்டிப்பு அதை நல்ல முடிவாக இருக்கும் என்றும் சந்திரசேகரராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

ஊரடங்கால் பொருளாதார பாதிப்பு மட்டுமே ஏற்படும் என்றும் அதிலிருந்து மீண்டு விடலாம் என்றும் ஆனால் உயிர்கள் போனால் மீட்க முடியுமா என்றும் தெலுங்கானா முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் அதை எதிர்கொள்ள ஊரடங்கு மட்டுமே அரசிடம் இருக்கும் ஒரே ஆயுதம் என்று சந்திரசேகரராவ் கூறியுள்ளார்.

 

எனவே எந்த தயக்கமும் இன்றி ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Leave a Reply