மோடி மிகப் பெரிய கோழை : கடுமையாகச் சாடிய சி.ஜே.பி தலைவர் அசுதோஷ் ரங்கா
தேர்தல் ஆணையத்திற்கு எதிராகக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி) நடத்தி வரும் போராட்டத்திற்கு இடையே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பாதுகாப்பதாகக் கூறிப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் கட்சித் தலைவர் அசுதோஷ் ரங்கா ஞாயிற்றுக்கிழமை கடுமையாகச் சாடினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரங்கா, “நரேந்திர மோடி இந்தியாவின் மிகப்பெரிய கோழை, இந்தியாவுக்கே ஒரு அவமானம்” என்று தெரிவித்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை “எந்தச் செலவிலாவது” பாதுகாப்பேன் என்பதைப் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், தேர்தல் ஆணையம் மற்றும் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம், தற்போது மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிரான போராட்டமாகவும் விரிவடைந்துள்ளது என்றும் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




