“பத்திரிகை, ஊடக செய்தியாளர்களுக்கு ரூ.3000 கொரோனா!!” நிவாரணம் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


கொரோனா வைரஸ் பீதிக்கிடையிலும், ஊரடங்கு உத்தரவுக்கு இடையிலும் அயராது பணியாற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிக்கை, ஊடக செய்தியாளர்களுக்கு, 3,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னையில் ஆயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் பரிதவிப்புக்கு ஆளாகினர். இது போல் நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் வெளி மாநில தொழிலாளர்கள் தத்தளித்தனர். இதனால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தத்தளிக்கும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிடத்தை உறுதி செய்து பாதுகாப் பளிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

 

சென்னையில் ஆர்.ஏ.புரம், பெரியமேடு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், தனி இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதல்வர் பழனிசாமி இன்று வெளி மாநில தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடங்களை நேரில் பார்வையிட்டார். மேலும், வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் உடைகளையும் வழங்கினார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

 

தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் ரூ .1000 நிவாரணத் தொகையை இனி டோக்கன் தரும் பொழுதே வழங்கப்படும் என்றார். ரேசன் பொருட்களை இந்த மாதம் இறுதி வரை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்தும்படி மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே மக்கள் வெளியே சுற்றுவது அதிகரித்தால் 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும் என்றும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்த முதல்வர், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், மக்கள் வெளியில் நடமாடாமல் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

 

கொரோனா வைரஸ் பரவல், ஊரடங்கு உத்தரவு போன்ற இந்த இக்கட்டான சூழலில் அயராது பணியாற்றி மக்களிடம் தகவல்களை கொண்டு சேர்க்கும் பணியில் பத்திரிகை, ஊடகத்துறையினரின் பங்கு முக்கியமானது. இதனால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை மற்றும் ஊடக செய்தியாளர்களுக்கு ரூ.3000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.மேலும், கொரோனா ஊரடங்கால் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படமாட்டாது எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.


Leave a Reply