பிரதமர் மோடியின் உரையால் ஏமாற்றம்..!
பிரதமர் மோடியின் உரை ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் ஏப்ரல் ஐந்தாம் தேதி விளக்கு ஏற்றுமாறு கூறிய பிரதமரின் பேச்சை தாங்கள் கேட்பதாகவும் அதற்கு பதிலாக தாங்களின் குரலுக்கும், பெருந்தொற்று வல்லுநர்கள், பொருளாதார நிபுணர்களின் பேச்சுக்கும் பிரதமர் செவிமடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடையாளப்படுத்திக் கொள்வது முக்கியமானது என்றாலும் சிறந்த யோசனைகள் மற்றும் நடவடிக்கைகளும் முக்கியமானவை என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். பணிபுரியும் ஆண்கள், பெண்கள் மற்றும் வர்த்தகர்கள் முதல் தினக் கூலிகள் வரை அனைவரும் பொருளாதார சரிவை ஈடுகட்டும் நடவடிக்கைகளையும், பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் திட்டத்தையும் எதிர்பார்த்து இருந்ததாக சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஏழைகளுக்கு உதவும் திட்டத்தையும் பிரதமரின் உரையில் எதிர் பார்த்ததாக சிதம்பரம் கூறியுள்ளார்.






