வீடியோகான்ஃபரன்ஸ் மூலம் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நடத்திய ஆலோசனை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் இதில் பங்கேற்றனர்.

 

மத்திய அமைச்சர் அமித்ஷா, அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பிரதமருடன் ஆலோசனையில் பங்கேற்றிருந்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் இருந்தபடி பங்கேற்றார்.

 

தமிழ்நாட்டில்தான் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மருத்துவ வசதிகள், மாநில அரசுக்கு தேவையான உதவிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியுடன் எடுத்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Leave a Reply