”கொரோனா கிருமி காற்றில் 27 அடி வரை பயணம் செய்யும்”
தும்மும் போதும், இருமும் போதும் கொரொனா வைரஸ் கிருமிகள் சுமார் 27 அடிவரை பயணம் செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி குறித்து உலக சுகாதார நிறுவனமும் அமெரிக்காவின் நோய் தொற்று தடுப்பு முகாமையும் நெறி முறைகளை வகுத்துள்ளனர்.
இதுகுறித்து கட்டுரையாக எழுதியுள்ள திரவ இயக்கவியல் நிபுணருமான லிடியா என்பவர் ஒருவர் தும்மும் போதும் இருமும் போதும் வைரஸ் கிருமிகள் குறைந்தபட்சம் 7 மீட்டர் முதல் 8 மீட்டர் வரை பயணிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
23 அடி முதல் 25 அடி வரை பரவும் வைரஸ் கிருமி சில மணி நேரம் வரை காற்றில் பரவி இருக்கும் என்றும் வைரஸ் பரவலை தடுக்க குறைந்தபட்சம் 6 அடி தூரம் வரை தள்ளி இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.






