--- --:--:-- --

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா..!

2

தமிழகத்தில் கொரொனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67 இலிருந்து 74 ஆக உயர்ந்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

 

திருவனந்தபுரம் சென்று திரும்பிய 43 வயது ஆணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லி சென்று திரும்பிய ஐந்து பேரில் மூன்று பேருக்கு விழுப்புரத்திலும், இரண்டு பேருக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

ஏற்கனவே வைரஸ் தொற்று ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 28 வயது ஆணுக்கு உறுதியாகியுள்ளது. இவருக்கு திருவண்ணாமலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon