இரண்டரை மணி நேரத்தில் கொரோனாவை கண்டுபிடிக்கலாம்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரசை கண்டுபிடிக்கும் சோதனைக்கு இப்போது பல நாட்கள் அவகாசம் தேவைப்படும் நிலையில், சுமார் இரண்டரை மணி நேரத்தில் கொரொனா தொற்றை கண்டுபிடிக்கும் விரைவான சோதனை முறையை உருவாக்கியுள்ளதாக பிரபல ஜெர்மன் மருத்துவ ஆய்வு நிறுவனமான போஸ் தெரிவித்துள்ளது.

 

இதற்காக டிபாலிட்டிக் மாலிக்யூலர் டயக்நாஸ்டிக் பிளாட்பார்ம் என்ற சோதனை முறையில் உருவாக்கியுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. உலகளவில் கொரொனாவை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் இந்த புதிய பரிசோதனை முறை உதவிகரமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

இந்த பரிசோதனை முறை ஏற்கனவே நிமோனியா, இன்ஃப்ளூயன்சா போன்றவற்றை பயன்படுத்தப்பட்டாலும் தற்போது அது கொரொனாவை கண்டுபிடிக்கும் வகையில் புதிய மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.


Leave a Reply