காற்றின் மூலமாக கொரோனா பரவுமா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


காற்று மூலம் கொரொனா பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் வெளியான செய்தி ஒன்று ஏரோசொல்ஸ் எனப்படும் காற்றில் வரும் நீர் துளிகள் மூலம் கொரொனா பரவ வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் அது போல பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என புதிய ஆய்வு கூறுவதாக தெரிவித்துள்ளது.

 

இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருப்போருக்கும் அவர்களின் பொருட்களை பயன்படுத்துவோர் வைரஸ் நீர்த்துளிகள் பட்ட பொருட்களை தொட்டு விட்டு தங்களின் மூக்கு, வாய் அல்லது கண்களை தொடுவதால் கொரொனா பரவும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


Leave a Reply