கொரோனா அச்சுறுத்தல்: வீட்டில் முடங்கியுள்ளோர் இந்த 5 வழிமுறைகளை கடைப்பிடியுங்கள்..! உலக சுகாதார அமைப்பு அறிவுரை!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் பீதியால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், இந்த நெருக்கடி இந்த காலக்கட்டத்தில் 5 வழிமுறைகளை கடைப்பிடித்தால் உடல் மற்றும் மன ரீதியாக ரிலாக்ஸ் ஆகலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதோநம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் நாம் அனைவரும் வீடுகளில் தனிமைப்பட்டுள்ளோம். எனது குடும்பமும் அப்படித்தான். பள்ளிக்கு விடுமுறையால் என் மகளும் வீட்டில் தான் முடங்கியுள்ளார். ஆனால் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்று வருகிறார்.

 

இந்த நெருக்கடி மற்றும் சோதனையான கட்டத்தில் மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்க கீழ்க்கண்ட 5 வலி முறைகளை பின்பற்றுதல் அவசியமானது.

 

1. ஊட்டச் சத்துமிக்க ஆரோக்சியமான உணவுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.

 

இதனால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 

2 மதுவை அறவே தவிர்க்க வேண்டும். இனிப்பு மிகுந்த குளிர்பானங்களை குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

 

3. புகைப்பிடிப்பதையும் முற்றிலும் நிறுத்த வேண்டும். புகை பிடிப்பதால் கோவிட் -19 போன்ற நோய்த் தாக்குதலுக்கு ஆளாகும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காது.

 

4. பெரியவர்கள் அனைவரும் தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வதும் அவசியம். வெளியில் செல்ல அனுமதி கிடைக்கும் பட்சத்தில் நடைப் பயிற்சி செய்யலாம் .இல்லாவிடில் வீட்டிற்குள்ளேயே சிறு பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

 

5. இந்த நெருக்கடியான சூழலில் கவலை, குழப்பங்கள் தன்னம்பிக்கை இன்மை போன்றவை மன வலிமையை குலைக்கச் செய்யும். எனவே மன ஆரோக்கியத்தை பாதுகாக்க, நம்பகத்தன்மை உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். இசை கேளுங்கள். புத்தகங்கள் படியுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.


Leave a Reply