--- --:--:-- --

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை

10

மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. கொரொனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பயன்படுத்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முன்பு பரிந்துரைத்தது.

 

இதன் எதிரொலியாக உள்நாட்டு சந்தையில்மருந்து போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு அவற்றை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த சில வாரங்களாக கிருமிநாசினிகள் அனைத்து வகையான வென்டிலேட்டர் மற்றும் அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் உள்ளிட்ட பல மருத்துவ சாதனங்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்திருந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon