--- --:--:-- --

நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம்..உபர் கால் டாக்சி நிறுவனம்!

9

கொரொனா தொடர்பான அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருத்துவப் பொருட்களை கொண்டு செல்வதற்கு உதவிட தயாராக இருப்பதாக கால்டாக்சி நிறுவனமான உபர் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் உடன் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மருந்து பொருட்களை கொண்டு சென்று உதவிட தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

 

கொரொனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களை காண செல்லும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை உபேர் நிறுவனம் தற்போது காரில் அழைத்துச் சென்று வருவதாகவும் அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon