தேர்தல் ஆணையம் : மாநிலங்களவை தேர்தல் ஒத்திவைப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நாடு முழுவதும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த மாநிலங்களவை தேர்தலை ஒத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாகும் 55 மாநிலங்களவை பகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இதில் தமிழகத்தில் இருந்து 6 உறுப்பினர்கள் உட்பட 37 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். குஜராத், ஆந்திர பிரதேசம்,ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள 18 இடங்களுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற இருந்தது.


Leave a Reply