144 உத்தரவால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா முன்னெச்சரிக்கையாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு இருப்பதால் சென்னையில் மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது. 144 தடை உத்தரவின் காரணமாக மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

 

இன்று மதியம் 12 மணிக்கு கடை திறந்தவுடன் மதுபாட்டில்களை வாங்குவதற்காக மதுபான பிரியர்கள் குவிந்தனர். இதனால் சென்னையில் பல மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது. கொரொனா முன்னெச்சரிக்கை சமூக விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி வரும் நிலையில் பலரும் அதனை கடைபிடிக்காமல் கும்பலாக நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.


Leave a Reply