வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்குள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

 

தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மீறி அவர்கள் வெளியே நடமாடினால் அவர்களுடைய பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரொனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் இம்மாதிரியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply