தமிழகத்தில் கொரோனா பரிசோதனை ‌மையம் 7ஆக அதிகரிப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் கொரொனா அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதிக்க 5 பரிசோதனை மையங்கள் இயங்கி வரும் நிலையில் மேலும் இரண்டு மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பரிசோதனை மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சென்னை, நெல்லை, திருவாரூர், தேனி தொடர்ந்து சேலத்தில் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு மையங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.


Leave a Reply