நிர்பயா குற்றவாளிகளின் கடைசி நிமிட செயல்கள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இன்று அதிகாலை தூக்கில் ஏற்றப்பட்ட நிர்பயா கைதிகள் 4 பேரும் தங்களுக்கான கடைசி நேர காலை உணவையும் ஏற்கவில்லை, குளிக்கவும் இல்லை என திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நான்கு பேரில் முகேஷ் சிங்கும், வினய் சர்மாவும் மட்டுமே நேற்று இரவு உணவு அருந்திய தாகவும், அவர்களுக்கு ரொட்டி, பருப்பு சாதம் மற்றும் காய்கறி கூட்டு வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

அக்ஷய் தாகூரும்,பவன் குப்தாவும் இரவு உணவையும் புறக்கணிப்பதாக கூறப்படுகிறது. முகேஷ் தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்பி அதை எழுத்து மூலம் சிறை அதிகாரிகளிடம் அளித்ததாக திகார் வட்டாரங்கள் தெரிவித்தன.

 

சிறையில் இருந்தபோது தான் வரைந்த ஓவியங்களை அங்கேயே வைத்துக் கொள்ளுமாறு கண்காணிப்பாளரிடம் வினய் சர்மா கேட்டுக் கொண்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

நேற்று இரவு அணிந்த உடைகளுடனே நான்கு பேரும் தூக்கிலிடப் பட்டதாகவும் நள்ளிரவு வரை நடந்த நீதிமன்ற விசாரணை குறித்த விவரங்கள் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


Leave a Reply