10 ஆயிரம் பேரை காவு வாங்கிய கொரொனா!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சீனாவில் உருவான கொரொனா உலகத்தின் பல நாடுகளை தாக்கி உயிர்களை காவு வாங்கி வருகிறது. நாளுக்குநாள் இதன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், உலகம் முழுக்க பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரம் அதிகரித்துள்ளது.இத்தாலியில் சுமார் 41,000 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 3 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

சீனாவில் கடந்த ஒரு நாளில் புதிதாக யாருக்கும் தோன்றாத நிலையில் அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 245 ஆக உள்ளது. அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருவதால் அங்கு கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இவர்களில் சுமார் 1,500 பேர் அண்மையில் உறுதி செய்யப்பட்டவர்கள்.

 

கொரொனாவால் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 கடந்துள்ளது. பிரான்ஸில் சுமார் 11,000 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 370 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டில் வருகிற மே மாதம் தொடங்கவிருந்த கேன்ஸ் திரைப்பட விழாவும் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் இந்த விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஆனால் உலகம் முழுக்க உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் இந்த நோயை கட்டுப்படுத்தும் முயற்சியிலும் மருந்து கண்டுபிடிக்கும் மேலும் பல நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன.


Leave a Reply