மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் தனி ஒருவனாக “கொரோனா” விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த மணிகண்டன்!!

Publish by: K.மகேந்திரன் --- Photo :


மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து இரண்டு நாள் தனி நபர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை அதன் நிறுவனர் மணிகண்டன் இன்று தொடங்கினார்.

 

கொரானோ அச்சுறுத்தல் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரையில் மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் மணிகண்டன் தனி நபராக கோரிப்பாளையம் தேவர் சிலை எதிரில் “கொரோனா… பயம் வேண்டாம்… கை கழுவுங்க போதும்…” என்ற பதாகையை கையில் தூக்கி வைத்து வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பின்னர் விழிப்புணர்வு நோட்டீஸை மக்களுக்கு வழங்கி சுத்தமாக இருந்தால் கொரோனா தாக்காது என்று விரிவாக எடுத்துரைத்தார்.

 

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டபோது சமூக ஆர்வலர்களை இந்த விழிப்புணர்வில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு சம்மதம் தெரிவித்த மாவட்ட ஆட்சியர்
கூட்டம் சேர்க்காமல் இயல்பாக மக்கள் நடமாடும் இடங்களில் விழிப்புணர்வை நடத்தலாம் என்று அனுமதி அளித்தார்.

அதன்படி இன்று வெள்ளிக்கிழமை கோரிப்பாளையம் சிக்னலில் விழிப்புணர்வும்
நாளை மதுரையின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு செய்யவுள்ளதாகவும்
மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பை பெறும் வகையில் இந்த விழிப்புணர்வை நடத்தி வருவதாகவும்
வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் அவர்கள் தெரிவித்தார்.


Leave a Reply