“திருப்பதி மலைப்பாதை தற்காலிகமாக மூடல்!!” பக்தர்கள் வரவேண்டாம் எனவும் அறிவிப்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரானா அச்சுறுத்தலால் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலுக்கும்ம் பக்தர்கள் தரிசனம் செய்ய வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டு, மலைப்பாதையும் தற்காலிகமாக மூடப்பட்டது.

 

கொரானா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரானா வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தி வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் நடமாட்டமும் குறைந்து நாடு முழுவதும் வெறிச்சோடிய நிலை காணப்படுகிறது.

 

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற முடிவுக்கு தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கரோனா பீதியால் ஏற்கனவே கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்து வந்தது. இந்நிலையில் இன்று மாலை மலைப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டது. ஏற்கனவே தரிசனத்திற்காக காத்திருப்போரை மட்டும் தரிசனம் செய்த பின், பொதுமக்கள் தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும், ஏழுமலையானுக்கு தினமும் 6 கால பூஜைகள் மட்டும் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Leave a Reply