கல்லூரி தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்லூரி தேர்வுகள் மார்ச் 31 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. யுஜிசி செயலர் ரஜினிஸ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31ம் தேதிக்கு பின்னர் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

 

விடைத்தாள் திருத்தும் பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்களுடைய மாணவர்களை மின்னணு முறையில் தொடர்பு கொண்டு தேர்வுகள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.


Leave a Reply