கட்டிட தொழிலாளியை காதல் திருமணம் செய்த மாணவி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சேலத்தில் கட்டிட தொழிலாளியை காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். சேலம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் என்பவர் அதே பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த ஜெயவர்த்தினி என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

 

இவர்கள் திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர் எதிர்ப்பை மீறி மூன்றாம் காடு மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பெண்ணின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்களால் அவர்கள் இருவரின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக கூறி தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 

திருமணம் செய்துகொண்ட ஜெயவர்த்தினி தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply