குற்றவாளிகளில் 3 பேர் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் 3 பேர் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். நிர்பயா குற்றவாளிகளான முகேஷ் குமார், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகியோரை வருகிற வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு தூக்கிலிடுமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

இதனையடுத்து முகேஷ் குமாருக்கு தூக்கு தண்டனைக்கு எதிராக புதிய சீராய்வு மனு, கருணை மனு தாக்கல் செய்ய அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் . அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

இந்த நிலையில் வினய், அக்ஷய் குமார் சிங் ஆகிய மூவரும் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி நெதர்லாந்து ஹேக் நகரில் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தில்முறையீடு செய்துள்ளனர். குற்றவாளிகளின் தூக்கு தண்டனை நிறைவேற்றும் இதுவரை மூன்று முறை நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது நான்காவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply