நெல்லையில் கொரோனா ஆய்வகம் அமைய உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வைரஸ் பரிசோதனை மையம் விரைவில் அமைக்க உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

சட்டப்பேரவையில் பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிபிஎம் மைதீன்கான் திருநல்வேலி மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் குடிநீர் மற்றும் பொது சுகாதார வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு மருத்துவமனைக்கு சீராக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும் தென் தமிழகத்தில் சிறந்து விளங்கக்கூடிய மருத்துவமனையான திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வைரஸ் பரிசோதனை மையம் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் விரைவில் கொரொனா ஆய்வகம் அமைய உள்ளதாகவும் விஜயபாஸ்கர் கூறினார்.


Leave a Reply