ஸ்பெயின் நாட்டு பிரதமர் மனைவிக்கும் கொரானா தொற்று..! உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் அச்சம்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரானா வைரஸ் அச்சுறுத்தல் யாரையும் விட்டு வைக்கவில்லை. இதனால் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.கனடா நாட்டு பிரதமர் மனைவிக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஸ்பெயின் நாட்டு பிரதமரின் மனைவிக்கும் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

 

உலகை அச்சுறுத்தும் கொரானா வைரஸ், உலக தலைவர்கள் பலருக்கும் கிலி ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பைக் கூட தவிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஏனெனில், இந்த வைரஸ் தொற்று அறிகுறி இருப்பவர்கள், தங்களுக்கு இருப்பதை மருத்துவ சோதனை செய்து உறுதி செய்வதற்கு முன், தாங்கள் சந்தித்த, உடன் பயணித்தவர்களுக்கு இந்த வைரஸ் எளிதில் பரவி விடுகிறது. பின்னர் உறுதி செய்தவுடன் அலறியடித்து அவர் சந்தித்த பலரையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டியதாக உள்ளது. எனவே இந்த கொரானா பாதிப்பை கட்டுப்படுத்த, நோய்த் தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்துவது ஒன்றே தீர்வாக உள்ளது.

 

இந்த கொரானோ வைரஸ் உலக தலைவர்கள் பலரின் குடும்பங்களில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் தங்களை தனித்தனியாக தனிமைப்படுத்தும் சூழலுக்கு தள்ளியுள்ளது என்பது தான் சோகமாகியுள்ளது. கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபியாவுக்கு கொரானா உறுதி செய்யப்பட்டு, கணவன் – மனைவி இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ்சின் மனைவி பொகானோ கோம்ஸ்சுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் ஸ்பெயின் பிரதமர் மற்றும் அவரது மனைவியுரம் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், இருவரும் நலமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்பெயின் நாட்டின் அமைச்சர் ஒருவருக்கும் இந்த கொரானா பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply