இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இந்தியாவில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 100 ஐ தொட்டுள்ளது. கொரொனா தாக்குதலால் கர்நாடகாவில் ஒரு முதியவரும், டெல்லியில் ஒரு மூதாட்டியும் இறந்த நிலையில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 31 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

கேரளாவில் 22 பேருக்கு கொரொனாவின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவிற்கு வந்த இத்தாலியை சேர்ந்த 16 பேரும், கனடா நபர் ஒருவரும் கொரொனாவால் தாக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதற்கிடையில் கொரொனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

 

கொரொனா வேகமாக பரவி வரும் நிலையில் இதை பேரிடர் சூழலாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்மூலம் மாநிலங்களின் பேரிடர் கால நிதியினை கொரொனா தடுப்பு பணிக்கு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கொரொனா பரிசோதனை கருவிகளை அதிக அளவில் வாங்குவது உடன் மருத்துவ பணியாளர்களையும் அதிகளவில் அமர்த்த முடியும்.

 

வெளிநாடுகளிலிருந்து வந்த 12 லட்சத்து 30 ஆயிரம் பயணிகளுக்கு கொரொனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. கொரொனா பாதித்த நூறு பேருடன் தொடர்பில் இருந்த நான்காயிரம் பேர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரொனா கடுமையாக பாதித்து உள்ள இத்தாலியில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சென்றுள்ள ஏர்இந்தியா சிறப்பு விமானம் இன்று தாயகம் திரும்ப உள்ளது.

 

ஈரானில் தவித்த 234 இந்தியர்கள் மீட்டு வரப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரொனா பரவுவதை தடுக்க பெரும்பாலான மாநிலங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளதுடன் தியேட்டர்கள், வணிக வளாகங்களை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளனர்.

 

கர்நாடகாவில் கொரொனாவால் இறந்தவரின் குடும்பத்தினருக்கு வைரஸ் தாக்கவில்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் மற்றொருவருக்கு செய்யப்பட்ட சிகிச்சையின் பரிசோதனை முடிவுகள் இன்று மாலை தான் தெரியவரும்.


Leave a Reply