திமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார்? மார்ச் 29-ல் கூடும் பொதுக்குழுவில் தேர்வு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பேராசிரியர் க.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து திமுக பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்காக பொதுக்குழுக் கூட்டம் மார்ச் 29-ல் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

திமுக பொதுச் செயலாளர் பதவியில் கடந்த 1977 முதல் 43 ஆண்டுகளாக இருந்தவர் பேராசிரியர் க.அன்பழகன். திமுக தலைவராக 50 ஆண்டுகள் இருந்து மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தவர் க.அன்பழகன். பேராசிரியர் என கட்சியினரால் அன்போடு அழைக்கப்பட்ட க அன்பழகன் கடந்த 7-ந்தேதி 98 வயதில் காலமானார்.

 

இதையடுத்து க.அன்பழகன் நீண்ட காலம் வகித்து வந்த திமுக பொதுச் செயலாளர் பதவி இப்போது காலியாக உள்ளது. புதிய பொதுச் செயலாளர் யார்? என்ற விவாதங்களும் சூடு பிடித்துள்ளன.இந்நிலையில் புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்ய திமுக பொதுக்குழு வரும் 29-ந் தேதி கூடும் என தலைமை கழகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடும் இந்தப் பொதுக்குழுவில், பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படப் போவது யார்? என்ற விவாதங்கள் கட்சிக்குள் பரபரப்பாக எழுந்துள்ளது. கட்சியில் தற்போதைக்கு மூத்த தலைவராகவும் பொருளாளராகவும் உள்ள துரைமுருகனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படும் நிலையில், பொருளாளர் பதவிக்கு முன்னிறுத்தப்படப் போவது யார்? என்ற விவாதங்களும் எழத் தொடங்கியுள்ளது.


Leave a Reply