கேரளாவில் 22 பேருக்கு கொரொனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 19 பேர் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் 5 ஆயிரத்து 468 பேருக்கு கொரொனா வைரஸ் அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 5 ஆயிரத்து 191 பேர் வீடுகளிலும், 227 பேர் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
1,715 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 1,132 பேருக்கு பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இதனிடையே மாவட்ட மருத்துவமனைகள் மட்டுமின்றி, தாலுகா மருத்துவமனைகளிலும் கொரொனா தடுப்பு சிறப்பு பிரிவுகள் தயார் படுத்தப்பட்டுள்ளன.
சபரிமலை, குருவாயூர் உள்ளிட்ட கோவில்களுக்கு வருவதை தவிர்க்குமாறு பக்தர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
சபரிமலையில் நடை திறக்கப்பட்ட நிலையில் பம்பையில் முழு மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நெய் அபிஷேகம், பூஜைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.