முன்னாள் காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் பிறகு வந்து இரண்டாவது வாய்ப்பு தரும்படி கெஞ்சிய தாகவும் ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தீபிகா படுகோன் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அண்மையில் அவர் அளித்த பேட்டியில் ரன்வீர்சிங்கிற்கு முன்பு தான் காதலித்த நபர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், பின்னர் இரண்டாவது வாய்ப்பு தரும்படி கெஞ்சியதாகவும் குறிப்பிட்டார். முதன்முறை தன்னுடைய காதலன் ஏமாற்றிய போது தம்மிடம் தான் தவறு இருக்க வேண்டும் என நினைத்த தாகவும் ,ஆனால் மீண்டும் மீண்டும் காதலன் ஏமாற்றும் செயலில் ஈடுபட்டதை பார்த்தபிறகு பிரிந்ததாக குறிப்பிட்டார்.
ஆனால் முன்னாள் காதலன் பெயரை தீபிகா வெளியிடவில்லை.