விபத்தில் சிக்கிய பசுவை மீட்ட நடிகர் கார்த்திக் குமார்!
சென்னையில் நேற்று நள்ளிரவில் விபத்தில் சிக்கிய பசுவை நடிகர் கார்த்திக் குமார் மீட்டார்.நேப்பியர் பாலத்தின் அருகில் நேற்று நள்ளிரவில் பசு ஒன்று சாலையில் சுற்றித் திரிந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பசுவின் மீது மோதியதில் பசுவிற்கு கால் முறிந்தது.

அப்போது அந்த வழியாக வந்த நடிகர் கார்த்திக் குமார் பசுவிற்கு தண்ணீர் வழங்கி பின்னர் ப்ளூகிராஸ் அமைப்பிற்கு தகவல் அளித்தார். ப்ளூ கிராஸ் இன் வாகனம் வரும்வரை அதன் அருகே இருந்து அனுப்பி வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




