ஹாப்பி மாம் வாட்ஸ்அப் குரூப் ! அப்டினா என்ன?
பச்சிளம் குழந்தைகளுக்கான உணவில் இன்றியமையாதது தாய்ப்பால். தாய்ப்பால் பற்றாக் குறையினால் பச்சிளம் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தமிழக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டில் முதன்முறையாக தாய்ப்பால் வங்கியை தொடங்கியது.
மூன்று குழந்தைகள் நல மருத்துவமனைகளில் தொடங்கப்பட்ட தாய்ப்பால் வங்கி 23 ஆக உயர்த்தப்பட்டதால் ஆண்டுக்கு 35 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் பயன் பெறுகின்றன. தாய்ப்பால் வங்கிக்கான புதிய வகை உபகரணங்கள், அதனை இயக்கும் முறை தொடர்பாக குழந்தைகள் நல மருத்துவர்கள் செவிலியர்கள் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.
எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை செவிலியர்களின் முயற்சியினால் ஹாப்பி மாம் என்ற வாட்ஸ்அப் குரூப் தொடங்கப்பட்டு அதில் தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் தகவல்கள் பரிமாறப்படுகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




