5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த முயற்சித்தது ஏன்..?
உலகத் தரத்தில் கல்வி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கொண்டுவர முயற்சித்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வு எழுதும் போது போட்டித் தேர்வு தொடர்பான அச்ச உணர்வு மாணவர்கள் மத்தியில் குறையும் என்ற அடிப்படையிலேயே அதனை கொண்டுவர வைத்ததாகவும் இவர் கூறினார்.
பொதுத்தேர்வு வைத்தாலும் 5 மற்றும் 8 ம் வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு செல்வதற்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சிகள் அதனை நிறைவேற்றவில்லை என சட்டப்பேரவையில் முதல்வர் சாடினார்.
கிராமப்புற மாணவர்களை போட்டித் தேர்வுக்கு தயார்படுத்த பொது தேர்வு முறை அவசியம் என்றும் இதன் மூலம் மாணவர்களின் தரத்தை அறிந்து கொள்ள முடியும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




