ஆசிரியை தவறவிட்ட பணத்தை மீட்டுத் தந்த மாணவிக்கு குவியும் பாராட்டுகள்
விழுப்புரத்தில் ஆசிரியை ஒருவர் தவறவிட்ட 35 ஆயிரம் ரூபாயை பத்திரமாக ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. விழுப்புரம், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நகராட்சி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வந்துள்ளார்.
அப்போது பள்ளி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பணப்பையை தவறவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஷர்மிளா கீழே கிடந்த பணத்தை எடுத்து தலைமையாசிரியரிடம் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து அந்த பணம் ஆசிரியையிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியர் இந்த செயலை சக மாணவியரும், ஆசிரியர்களும் பாராட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




