தெலுங்கு தேசம் நிர்வாகிகள் மீதான தாக்குதல் வீடியோ
ஆந்திராவில் ஜில்லா பரிஷத் தேர்தல் தகராறில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் மீது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
குண்டூர் மாவட்டம் மாட்ஷர்லாவில் தெலுங்கு தேசம் கட்சியினரின் வேட்புமனுக்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் பறித்து கிழித்து எறிந்தது உடன் அங்கு காரில் சென்ற தெலுங்குதேசம் முன்னாள் எம்எல்ஏ போண்டாஉமா, எம்எல்சிபி புத்தா வெங்கன் ஆகியோரையும் வழிமறித்து தாக்கியுள்ளனர்.
இதில் இருவரும் காயத்துடன் உயிர் தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தனது 40 ஆண்டு கால அரசியல் அனுபவத்தில் இது போன்ற வன்முறையை பார்த்ததில்லை என்று தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




