டாஸ்மாக் பாரில் ஊழியர் வெட்டி கொலை!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே டாஸ்மாக் பாரில் அதன் ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்டார். பூத்துறை சேர்ந்த துரைராஜ் என்பவர் தண்ணீர் தாசன் ஊரிலுள்ள பாருக்கு மது அருந்த சென்றார்.

 

அங்கு பணிபுரியும் ஊழியர்களான ராமமூர்த்தி மற்றும் அண்ணாமலை ஆகியோரிடம் பார் அனுமதி பெறாமல் இயங்குவதாக கூறி துரைராஜ் தகராறு செய்து விட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் துரைராஜன் தரப்பினர் எனக் கூறப்படும் ஏழு பேர் கொண்ட கும்பல் புகுந்து ஊழியர்கள் ராமமூர்த்தி, அண்ணாமலை ஆகியோரை சரமாரியாக வெட்டி தாக்கியதோடு அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது.

 

ராமமூர்த்தி உயிரிழந்த நிலையில் அண்ணாமலை படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply