ஈபிஎஸ் – ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் மனுத் தாக்கல்
அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது.
கடந்த ஆறாம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திருச்சி சிவா, இளங்கோவன், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் தங்களுடைய வேட்புமனுவை அண்மையில் தாக்கல் செய்திருந்தார்கள்.
இந்நிலையில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பாமக தலைவர் ஜிகே வாசன் ஆகியோர் தலைமை செயலகத்தில் சட்டப்பேரவைசெயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




