அரசு பேருந்து முன்பு விழுந்து முதியவர் தற்கொலை

சென்னை தண்டையார்பேட்டையில் அரசு பேருந்து முன்பு விழுந்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பதிவான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட அந்த பேருந்து தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது.

 

அப்போது சாலையோரம் நின்றிருந்த முதியவர் ஒருவர் திடீரென பேருந்தின் பின்பக்க சக்கரத்தின் முன்பு விழுந்த நிலையில் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரசு பேருந்து முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட முதியவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply