--- --:--:-- --

மது அருந்தினால் கொரானா வராது என்ற வதந்தியால் 29 பேர் பலி

10

ஈரானில் கொரானா வைரஸ் பாதிப்பை குணப்படுத்தும் என்ற வதந்தியை நம்பி கள்ள சாராயம் அருந்திய 29 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் மது அருந்துவதன் மூலம் கொரானா பாதிப்பை குணப்படுத்தலாம் என வதந்தி பரவி வருகிறது.

 

அதனை நம்பி கொஜஸ்த்தான் மாகாணத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 218 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 22 பேர் பலியாகியுள்ளனர். அதைப்போல அல்கூஸ் பிராந்தியத்தில் கள்ள சாராயம் அருந்திய 7 பேர் உயிரிழந்தனர்.

 

ஈரானில் இஸ்லாமியர் அல்லாத பிற மதங்களை சேர்ந்த சிறுபான்மையினரை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் மது அருந்த தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon