கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு தந்த ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இத்தாலியில் இருந்து கடந்த வாரம் இந்தியா திரும்பிய பிறகு பிற பயணிகளை போல அவருக்கும் டெல்லி விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தாலி சென்றிருந்த ராகுல்காந்தி இரு வாரங்களுக்கு பின் கடந்த மாதம் 29ஆம் தேதி டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் தரை இறங்கினார்.கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளான நாடுகளில் இத்தாலியும் இருப்பதால் அங்கிருந்து வருபவர்களை முழு மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி விமானத்தில் வந்திறங்கிய அனைத்து பயணிகளையும் கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படி அதிகாரிகள் அறிவித்தனர். இந்த சோதனைகள் முடிய 20 முதல் 25 நிமிடங்கள் வரை நேரமானதால் ராகுல்காந்தியுடன் வந்திருந்த அவரது மை காப்பாளர்கள் சற்று எரிச்சல் அடைந்ததாக கூறப்படுகிறது.
எனினும் பொறுமை காத்த ராகுல்காந்தி தாமாக முன்வந்து மத்திய சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து சோதனைகளையும் ஒத்துழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ சோதனைகள் முடிந்ததும் ராகுல்காந்தி புன்சிரிப்புடன் விமான நிலையத்திலிருந்து சென்றதாகவும் கடமையை முறையாக செய்த சுகாதாரத் துறை அதிகாரிகளை பாராட்டி நன்றி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




