தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை
தமிழ்நாட்டில் கொரொனா வைரஸ் குறித்த வீண் வதந்திகள் பற்றி மக்கள் கலக்கமடைய வேண்டாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய பொது இடங்களில் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதை தெரிவித்தார்.
வீண் வதந்திகளை கண்டு மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதனிடையே கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.
அதனை தடுக்கவும் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவக்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




