பயணி ஒருவர் தவறவிட்ட பணம்! காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்!

சிவகங்கை அருகே பயணி ஒருவர் தவற விட்ட பணத்தை காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. காரைக்குடியை சேர்ந்த கலைஞர் என்பவரின் ஆட்டோவில் நேற்று முன்தினம் மாலை இளைஞர் ஒருவர் பயணித்துள்ளார்.

 

அவரை கண்டனுரில் இறக்கி விட்டு மீண்டும் காரைக்குடி வந்த ஓட்டுநர் ஆட்டோவில் மணிபர்ஸ் ஒன்று கிடந்ததைப் பார்த்தார். அதில் 13 ஆயிரத்து ஐநூறு ரூபாய் மற்றும் ஏடிஎம் கார்டு இருந்த நிலையில் மொபைல் எண் போன்ற விபரங்கள் இல்லாததால் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மணி பர்சை ஒப்படைத்தார்.

 

இதையடுத்து மணி பர்சில் இருந்த வாக்காளர் அடையாள அட்டை மூலம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நேர்மையான செயலால் ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Leave a Reply