ரேஷன் கடைகளில் இந்தப் பொருட்கள் கிடைக்காவிட்டால் புகார் அளிக்கலாம்
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாடு ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் தலைமையில் செவ்வாய்கிழமை (03.11.2026) தலைமைச் செயலகத்தில், துறை சார்ந்த உயர் அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் எவ்வித சிரமமுமின்றி அத்தியாவசிய பொருட்கள் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 01.11.2026 முதல் அனைத்து அட்டைதாரர்களும் எவ்வித சிரமமுமின்றி பயன்பெறும் வகையில் 2026-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் முழுமையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு, அத்தியாவசியப் பொருட்கள் முன்நகர்வு கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
எனவே, குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் பெற்றுக்கொள்ளலாம். அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் சிரமம் ஏதேனும் இருப்பின் ஆணையாளர் அலுவலக இலவச உதவி மைய எண் 1967 அல்லது உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளம் www.tnpds.gov.in வாயிலாகவோ தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுளளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




