ஈரானில் கொரானா அச்சுறுத்தலால் தவிக்கும் தமிழக மீனவர்கள்

கொரானா அச்சுறுத்தல் இருப்பதால் ஈரானில் உள்ள தங்களை உடனடியாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்நாட்டில் உள்ள தமிழக மீனவர்கள் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

கடலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமிழக மீனவர்கள் சுமார் 340 பேர் ஈரானில் உள்ள தீவு ஒன்றில் இருந்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். தங்களது பாஸ்போர்ட்டுகளை ஈரானில் உள்ள முதலாளிகள் வைத்துள்ளதாகவும், ஊருக்கு அனுப்பி வைத்தால் தொழில் பாதிப்படையும் எனக்கருதி முதலாளிகள் பாஸ்போர்ட்டுகளை தர மறுப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதனால் தங்களை உடனடியாக சொந்த ஊருக்கு அழைத்து செல்ல இந்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply