ஹெல்மெட் அணிந்த மர்மநபர் நூதன திருட்டு
திருப்பூர் அருகே சுவர் ஏறி குதித்து வீடு புகுந்த ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் அரிவாளை காட்டி மிரட்டி பெண்ணிடம் 11 சவரன் தங்க நகைகளை பறித்து சென்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சொர்ணபுரி ஆயில் அண்ட் பகுதியில் வசித்துவருபவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் அவரது மனைவியும், மகனும் மட்டும் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி இரவு அவரது வீட்டில் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் அரிவாளை காட்டி மிரட்டி பூங்கொடி அணிந்திருந்த 11 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றுள்ளார்.
மர்ம நபர் அரிவாளுடன் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்வதும் பின்னர் வெளியே வருவதும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. அதனை கைப்பற்றி வேலம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




