இந்தியாவில் 12 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆக்ராவில் மட்டும் ஆறு பேருக்கு கொரானா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது இரத்த மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இத்தாலியில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கும், துபாயிலிருந்து தெலுங்கானா வந்த ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. மேலும் ஜெய்ப்பூருக்கு இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலா பயணிக்கும் கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி 29ஆம் தேதி காலையில் இருந்து கேரளாவிற்கு வந்த மருத்துவ மாணவர்கள் மூவருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.