--- --:--:-- --

வரவிருக்கும் நடமாடும் அம்மா உணவகம்

3

நடமாடும் அம்மா உணவகத் திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளிலும், ராஜீவ்காந்தி ஸ்டான்லி எழும்பூர் அரசு மருத்துவமனையில் என முக்கிய இடங்களிலும் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

 

நஷ்டத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை மேம்படுத்தி விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ள மாநகராட்சி நிர்வாகம் நடமாடும் அம்மா உணவகத் திட்டத்தை தொடங்கி வைக்க முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 5 லட்சத்து 60 ரூபாய் மதிப்பில் 3 வேன்கள் வாங்கப்பட்டு உணவு விற்பனை செய்ய ஏதுவாக அவற்றை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளை கண்டறிந்து நடமாடும் அம்மா உணவகத்தை நிறுத்தி விற்பனை செய்ய முடிவு செய்து அதிகாரிகள் அதற்கு கிடைக்கும் வரவேற்பு பொருத்து மேலும் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon