உத்தரபிரதேசத்தில் டிக்டாக் மோகத்தால் கால்வாயில் குதித்து வீடியோ எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. மீரட்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் விதவிதமாக டிக் டாக் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கால்வாயின் மதகில் இருந்து நீர் அதிக அளவில் வெளியேறிக் கொண்டிருக்க அதிலிருந்து குதித்து வீடியோ எடுக்க ஆசை கொண்ட இளைஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளார்.
அப்போது நண்பர்கள் அறிவுறுத்தியும் கேட்காமல் உயரமான மலையிலிருந்து குதித்த இளைஞரின் தலைப்பகுதி அருகில் இருந்த பாறையில் பலமாக மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்த நண்பர்கள் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட அவை வைரலாகி வருகின்றன.