--- --:--:-- --

ராஜீவ் காந்தி..சர்ச்சைக்குரிய வீடியோ.. வருத்தம் தெரிவித்தார் தம்பி!

5

கடந்தாண்டு விக்ரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழர்கள்தான் என்று கூறி மேடையில் முழங்கினார் .

 

அதற்கு ஒரு படி மேலே போய் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளரான சாட்டை துரைமுருகன் என்பவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு சென்று தமிழர்களை தொட்டதால் தூக்கினோம் என்று சீமான் குரலில் டிக் டாக் செய்து வீடியோ ஒன்றை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் .

ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று அவரை இழிவுபடுத்தும் விதமாக விடியோ பதிவிட்ட சாட்டை துரைமுருகன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர். இதையடுத்து துரைமுருகனை தொடர்பு கொண்டு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்ததாக கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் நாம் தமிழர் கட்சியின் துரைமுருகனிடமிருந்து மீண்டும் ஒரு மன்னிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஒரு பெண்ணை சாதி ரீதியாக இழிவுபடுத்தும் வீடியோ பதிவிட்டதால் துரைமுருகன் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon