வாயில் ரத்தத்துடன் லவ் பெயிலியர் பொண்ணு டிக்டாக்..! என்னை விட்டு வேற பொண்ணு கூட போயிட்டாங்க!
காதலித்து திருமணம் செய்த கணவன் தன்னை விட்டு சென்றதாக இளம்பெண் ஒருவர் காதலர் தினத்தன்று கொடுத்த பேட்டி கடந்த சில நாட்களாக வீடியோ வைரலானது. காதலித்து கரம் பிடித்த அவன் கைவிட்டாலும் கணவனுக்காக உருகும் இந்தப் பெண்ணை முன்மாதிரியாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்டனர்.
கணவன் தன்னை விட்டுச் சென்றாலும் தனது கணவன் அந்த பெண்ணுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது. அவரது காதல் உண்மை, புனிதம் என்று அவரது பேட்டியை புகழ்ந்து பகிர்ந்தனர். எத்தனையோ டிக் டாக் பிரபலங்களின் பல நாட்களுக்கு கிடைக்காத புகழ் ஒரே வீடியோவில் இந்தப் பெண்ணுக்கு கிடைத்து.
யாரோ ஒரு இளைஞனுடன் வேறு ஒரு பெண் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு இப்படிப்பட்ட பெண்ணை கணவன் கைவிடாமல் என்ன செய்வான் என பதிவுகள் வெளியாகின. அடுத்தடுத்த நாட்களில் அந்தப் பெண்ணின் டிக் டாக் வீடியோக்கள் சுற்றின. தனது தங்கையுடன் அவர் மகிழ்ச்சியாக ஆடிப்பாடி வெளியிட்டிருந்த டிக்டாக்கில் பலரும் அவரை திட்டித் தீர்த்தனர்.
ஆபாச வார்த்தைகள் அவரது டிக் டாக் கமெண்டில் நிரம்பிக் கிடக்கின்றன. ஒரே நாளில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய சமூக வலைதளங்கள் அதே வேகத்தில் தரையில் போட்டு மிதித்து விட்டதால் ஏமாற்றத்தைத் தாங்க முடியவில்லை என அந்தப் பெண் மீண்டும் ஒரு டிக் டாக் போட்டுள்ளார். விஷத்தை குடித்துவிட்டதாக அந்தப்பெண் போட்டுள்ள டிக்டாக் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தானும் விஷம் குடித்து விட்டதாக அந்தப்பெண்ணின் தங்கையும் டிக்டாக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ஊர் பெயரை உறுதிப்படுத்த முடியாத இந்த இரண்டு இளம் பெண்களுக்கும் என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை. ஆனால் டிக்டாக்கில் சிக்கி வாழ்வை சீரழித்து கொள்ளும் இளம் பெண்களுக்கு இது ஒரு பாடம் என்பது தான் நிதர்சனம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




